சட்டசபையில் டி.டி.வி தினகரனுக்கு வாழ்த்து கூறிய திமுக எம்எல்ஏக்கள்

சென்னை:

ன்று கவர்னர் உரையுடன் தொடங்கி உள்ள தமிழக சட்டசபைக்கு, ஆர்.கே.நகரில்  சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் வந்திருந்தார்.

அவருக்கு திமுக எம்எல்ஏக்கள் நேரு உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி அளவில் கவர்னர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக காலை 9.45 மணி அளவில் சட்டசபை வளாகத்தில்  ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வந்திருந்தார்.

அவரை சட்டமன்றத்தில் இருந்து தகுதி செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் அழைத்துச்சென்று சட்டசபையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வைக்க முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே விட சபை காவலர்கள் மறுத்ததால், டிடிவி  ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் தினகரனை உள்ளே வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

சட்டமன்றத்தில் டிடிவி தினகரனுக்க 148வது எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக  சட்டசபைக்கு வந்த டிடிவி  தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தினகரன் சிரித்துக்கொண்டே நன்றி கூறினார்.

இது அதிமுக எம்எல்ஏக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.