இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

சென்னை,

ன்று மாலை சென்னை அண்ணா  அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம் நடைபெறுவதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது.

நாளை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக  எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டபோது, பணம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில தொலைக்காட்சியில் வீடியோ வெளியானதை தொடர்ந்து அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,  இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

திமுக செயலத் தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது நாளை, சட்டப்பேரவையில் கூவத்தூர் பிரச்சினை குறித்து எழுப்புவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக நாளை கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களும் நடைபெறலாம், இல்லையேல் மீண்டும் ஒரு சட்டைக்கிழிப்பு நிகழ்வும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.