Random image

ஜனவரி 2ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! கொறடா சக்கரபாணி உத்தரவு

சென்னை:

மிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2ம் தேதி தொடங்குவதாக தமிழக சட்டமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார். இந்த நிலையில்,  ஜனவரி இரண்டாம் தேதி மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 2ம் தேதி மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்  அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக சட்டமன்ற  கொறடா சக்கரபாணி உத்தரவிட்டு உள்ளார்.

புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 2ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார். அதைத்தொடர்ந்து ஆளுநர் உரை விவாதம் ஜனவரி 3ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 2ந்தேதி மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு திமுக சட்டமன்ற கொறடா அழைப்பு விடுத்துள்ளார்.