சட்டசபை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காது! கனிமொழி

சென்னை,

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார். அவருடன் 30 பேர் இணைந்த புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு  கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிர் அணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினர்.  நாளை சட்டசபை  வாக்கெடுப்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். யாருக்கும் ஆதரவு இல்லை என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது என்று கூறினார்.

ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் இதே கருத்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.