சென்னை:

மிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவிகிம் ஊதிய உயர்வு அளித்து கடந்த ஜனவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை நிலவி வரும் வேளையில் சம்பள உயர்வு தேவையா என திமுக கடும்  எதிர்ப்பு தெரிவித்தது. சம்பள உயர்வு தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு தேவையில்லை என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள்,  தமிழக அரசு வழங்கிய சம்பள உயர்வை விட்டுக்கொடுப்பதாக பேரவை அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து, ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று  தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவிகித சம்பள உயர்வு அளிப்பதாக கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டது.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஸ்டாலின்,  திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என   தெரிவித்தார். இந்த விவாதத்தின் போது மு க ஸ்டாலினும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வின்மை, மோசமான தமிழக நிதிநிலை, விவசாயிகள் பரிதவிக்கும் போது ‘திமுக MLAக்கள் சம்பள உயர்வை புறக்கணிப்பதாக’ செயல்தலைவர் தளபதி தெரிவித்ததன்படி. சம்பள உயர்வை புறக்கணிப்பார்கள் என்றும், பழைய ஊதியத்தையே பெறுவார்கள் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேரவை செயலாளருக்கு திமுக உறுப்பினர்கள் கடிதம் எழுதினர்.அதை  ஏற்று சம்பள உயர்வை விட்டுக் கொடுப்பதற்கான அரசாணையை பிறப்பித்தது தமிழக அரசு.

அதில், திமுக எம்எல்ஏக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியமான  ரூ.55 ஆயிரத்தை மட்டுமே  பெறுவார்கள் என்றும், உயர்த்திய சம்பளமான  ரூ.50 ஆயிரத்தை  தமிழக அரசுக்கு திரும்ப கொடுக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்படுகிறது.