a
வாக்காளர்களுக்கு லஞ்சமாக அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்கப்படுவதும், அதைத் தடுக்க கடும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு தேர்தல் கமிஷன் ஏமாந்து போவதும் வழக்கமாக நடப்படதுதான். வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், தேர்தல் கமிஷன், வாகனச் சோதனையில் ஈடுபட்டு பணத்தை கைப்பற்றுகிறது.
சமீபத்தில் கரூரிலும்,  சென்னையிலும் அ.தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ்களில்  பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற தனியார் பேருந்தில் கடந்தப்பட்ட ரூ50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  ரகசிய தகவலின் அடிப்படையில் கட்டப்பட்டி டோல்கேட்டில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது.  சென்னையில் உணவகம் நடத்திவரும் நவநீதன் என்பவர் தனது பாதுகாவலர் மூலம் தொகையை மதுரைக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள திமுக பிரமுகர்களிடம் பணம் வாங்கி போலியான கணக்கு எழுதி மதுரை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.