தூத்துக்குடி என்.பெரியசாமி மறைவுக்கு திமுக இரங்கல்! ஸ்டாலின் குடும்பத்தினர் அஞ்சலி!!

சென்னை:

டல்நலக்குறைவால் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட  செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு திமுக தலைமைக்கழகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு திமுக தலைமைக்கழகம்  இரங்கல் தெரிவித்துள்ளதாகவும்,  3 நாட்களுக்கு கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படும் என்று தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் குடும்பத்தினர் அஞ்சலி:

மறைந்த என்.பெரியசாமியின் உடலுக்கு திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் மனைவி, சகோதரி அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா, சகோதரி செல்வி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மறைந்த என் பெரியசாமியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அதைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.