காவிரி: குடியரசு தலைவரை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்

டில்லி:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த தி.மு.க. எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர்.

கனிமொழி - பிரணாப்
கனிமொழி – பிரணாப்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை, கர்நாடகா தர மறுப்பதை அடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பிறகு பின்வாங்கியது.

இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள்  குழு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியது. இந்த சந்திப்பில் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.எஸ். பாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.

கார்ட்டூன் கேலரி