சென்னை:
திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 26 ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.