திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.. விவரம்
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது பட்டியல் தற்போது திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார் விருது- மா.மீனாட்சி சுந்தரம்,
அண்ணா விருது- அ. ராமசாமி,
கலைஞர் விருது- எஸ்.என்.எம்.உபயதுல்லா,
பாவேந்தர் விருது- அ.தமிழரசி,
பேராசிரியர் விருது- சுப.ராஜகோபால்
அவர்களுக்கு வழங்கப்படும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
