சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக நோட்டீஸ்

சென்னை:

திமுக எம்எல்ஏக்கள் 3 பேர்  டிடிவிக்கு  ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில்,  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதா திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.


டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க  அதிமுக கொறடா ராஜேந்திரன்  புகார் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, விளக்கம் கேட்டு,  அவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி தலைமையிலான குழுவினர்  தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலரை நேரில் சந்தித்து நமபிக்கையில்லாத் தீர்மான த்திற்கான கடிதம் கொடுத்தனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் தனபாலின் செயல்பாடு பாரபட்சமாகவும், ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக உள்ளது என்றும் திமுக தரப்பு தெரிவித்துள்ளது. விதிப்படி நோட்டீஸின் பிரதி சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி