ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு…சட்ட ஆணையத்துக்கு கடிதம்

சென்னை:

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ மாநில சுயாட்சி மாநாடு நடத்த முயற்சி செய்து வருகிறோம். இடம், தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் சென்னையில் இருந்து பேட்டி கொடுக்கலாம். சட்டசபையில் முதல்வர் தவறான தகவலை சொல்லலாம். சேலத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் ஏற்று கொண்டால், நானும் ஏற்று கொள்கிறேன்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அது என்ன ஆனது என தெரியவில்லை. அதேபோல் இதுவும் ஆகிவிடக்கூடாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுட்ட ஆணையத்துக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.