லோக்சபா தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு ரூ.25கோடி வாரி வழங்கிய திமுக! சர்ச்சை

சென்னை:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிகளான சிபிஎம் கட்சிக்கு  ரூ.15 கோடி, சிபிஐக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.25 கோடி திமுக வாரி வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களுக்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 39 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் செலவு தொடர்பாக  தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவின விவரங்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் செலவிடம் தொடர்பாக திமுக தலைமை கடந்த மாதம் (ஆகஸ்டு) 27ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் சமர்பித்தது.

அதில், சிபிஎம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், சிபிஎம்மிற்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சிபிஎம் சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி என்று கூறப்பட்டு உள்ளதாக தககவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில் சிபிஐ சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை.

திமுக வழங்கியாக கூறப்படும் நன்கொடை குறித்து  சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநில பிரிவின் மூலம் பெறப்பட்ட விவரங்களை மத்திய குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும், அடுத்த பிரமாண பத்திரத்தில் அந்த விபரங்கள் தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், நாங்கள் பெற்ற பணம் ஊழல் பணமல்ல. தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் உதவினர், இது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகி ஒருவர், இதுபோன்று நிதி வழங்கப்படுவது தேர்தல் சமயத்தில் நடைபெறும் வழக்கம் என்றும், இந்தமுறை அந்த விவரங்களை திமுக தேர்தல் செலவினங்களில் சேர்த்துள்ளது என்று கூறினார்.

மேலும் திமுக தாக்கல் செய்த செலவின பிரம்மான பத்திரத்தில்,

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ. 58.94 லட்சமும்,

ஊடகங்கள் வாயிலான பிரசாரத்திற்கு ரூ. 15.46 கோடியும் செலவாக காட்டியுள்ளது.

மேலும், லோக்சபா வேட்பாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும் செலவு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களி லும் கடும் விவாதப்பொருளாகி வருகிறது.

உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் ரூ.15 கோடி, ரூ.10 கோடி என பணம் வாங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: communist parties, CPI, CPM, DMK paid Rs 25 crore, lok sabha election
-=-