நியூஸ்பாண்ட்:

மைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திலும் அவரது கூட்டாளிகளின் இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தி.மு.க.வினர், “அமைச்சர் விஜயபாஸ்கரால் தமிழகத்துக்கே தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கூட்டாளிகளுள் ஒருவரான தி.மு.க. பிரமுகர் மீது வருமானவரித்துறை தனது பார்வையை பதித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து கூறப்படுவது இதுதான்:

“விழுப்புரம் மாவட்ட திமுக புள்ளியான இவர் ரியல் எஸ்டேட் பிஸினஸில் கோலோச்சுபவர். இவரது மகனும் இதே துறையில் ஈடுபட்டு வருகிறார். விஜயபாஸ்கரின் கூட்டாளிகளுள் ஒருவரான நாமக்கல் ஒப்பந்தாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்துகொண்டார் அல்லவா? அவர் அளவுக்கு இந்த இருவரும் விஜயபாஸ்கருக்கு நெருக்கம்.

இந்த இருவருக்கும் கட்சி மேலிடம் வரை செல்வாக்கு உண்டு.

ஆகவேதான் ஆரம்பத்தில் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவந்த திமுக, பிறகு சைலண்ட் ஆகிவிட்டது.

இந்த நிலையில், குறிப்பிட்ட இரு பிரமுகர்களின் பண நடமாட்டத்தை கண்காணிக்கத் துவங்கியிருக்கிறது வருமானவரித்துறை. விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.