சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.   இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்றா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமும, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள்  பங்கேற்றன.

கூட்ட முடிவில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் காவிரி விவகாரம் குறித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிட்டார்.   அத்துடன் பச்சை துண்டு அணிந்து திடீரென வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.    அவருடன் திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி  மற்றும் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்ல வற்புறுத்தினர்.   ஆனால் அவர்கள் மறுக்கவே  ஸ்டாலின்,  திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி மற்றும் முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஒட்டி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.   இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.    மேலும் மாநிலம் எங்கும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.