ன்று காவிரிக்காக தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின்,  கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்ளாவில்லை. ஆனால் அழைப்பு விடுத்ததற்கு நன்றி கூறி ஸ்டாலினுக்கு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதினார் அதில். “தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம். அழைப்பு விடுத்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டார். மேலும், “வி.சி.க. அங்கம் வகிக்கும் ம.ந.கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நாங்கள் கலந்துகொள்ளவில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

வன்னியரசு
வன்னியரசு

பதிலுக்கு மு.க. ஸ்டாலினும், “ன்பு சகோதரருக்கு” என்று விளித்து திருமாவுக்கு கடிதம் எழுதினார். அக் கடிதத்தில், “ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்றுத் தேவையை முழுமையாக உணர்ந்து, இதை தேர்தல் அரசியலோடு முடிச்சி போடாமல் அணுகிட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்கப்பட வேண்டியதாகும்” என்று பாராட்டியிருக்கிறார், ஸ்டாலின்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தனது முகநூல் பக்கத்தில், தி.மு.க. கூட்டிய  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை  கடுமையாக விமர்சித்து  எழுதியிருக்கிறார்.
“சடங்குதனமான தீரமானங்களுக்கா
அனைத்துக்கட்சி கூட்டம் ?” என்ற தலைப்பில் அவர் எழுதிய முகநூல் பதிவு:
“திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்கள் மூலமாக இந்த கூட்டம் தோல்வி அடைந்து விட்டதாகத்தான் கருத முடிகிறது. அதாவது, எந்த ஒரு வலிமையான போராட்டத்தை முன்னெடுக்காமல்
சடங்குதனமான தீர்மானங்களை தான் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
வன்னியரசு முகநூல் பதிவு
வன்னியரசு முகநூல் பதிவு

வழக்கம்போல,  மத்திய அரசுக்கு கண்டனமாம்..
இது ஒரு தீர்மானம்
(நம்புங்கள்)
இரண்டாவது,
பிரதமரை சந்தித்து
முறையிடுவதாம்
மூன்றாவது,
காவேரி மேலான்மை வாரியத்தை
உடனடியாக அமைக்க வேண்டுமாம்
நான்காவது,
காவிரி தொழில் நுட்ப குழு
நேர்மையான அறிக்கையை தயாரிக்க வேண்டுமாம் அத்துடன்,
மத்திய அரசு ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடு தரணுமாம்
அடேங்கப்பா
என்ன புரட்சிகரமான தீர்மானத்தை
போட்டுவிட்டாரகள் பாருங்கள்.
கடந்த அக்டோபர் 6 ம் தேதி திரு.தெய்வசிகாமணி அவர்களது தலைமையிலான விவசாயிகள் சங்க கூட்டத்தில் ,
10 லட்சம் மக்களை திரட்டி தலைநகர் சென்னையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற வகையில் பேரணி நடத்த
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதை நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டு, வெறும் சடங்குதனமான தீர்மானங்களை போட்டிருப்பது
காவிரிக்காக அல்ல,
தேர்தலுக்கான
அனைத்துக்கட்சி கூட்டம் என்பதை
இத் தீர்மானங்கள் வழிமொழிகின்றன.
இப்படியான கூட்டத்தில்
கலந்து கொள்ளாவிட்டால்
துரோகிகளாம்…
கூடங்குளம் அணு உலைகள்,
மீத்தேன்,
மணல் கொள்ளை,
மது வியாபாரம்…
இப்படி அடுக்கடுக்கான
துரோகங்களை
தமிழ் மக்களுக்கு
அள்ளி தந்த
திமுக துரோகத்தை பேசலாமா?” என்று வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், அனைத்துக் கட்சி கூட்டத்தை வரவேற்று கடிதம் எழுதியுள்ள நிலையில், அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.