சென்னை:

திமுக பாமக இடையே இன்று கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து கருத்து தெரி வித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை யில்லை, பணத்தை பற்றித்தான் கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை யில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்டணியில் சேரும் மற்ற கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது.

அதுபோல அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர பாமக திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையேயும் பாமக பேசி வந்த நிலையில், அதிமுக கூடுதல் தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

ராமதாசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பாமக அதிமுக கூட்டணி குறித்து கடுமையாக சாடினார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி என்றவர், அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டவர் பாமக தலைவர் ராமதாஸ் என்றும் அந்த பெரிய மனுஷன்தான் அற்போது  தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்று கூறினார்.

அவருக்கு கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை, நாட்டை பற்றி கவலையில்லை என்று கூறிய ஸ்டாலின், ராமதாசுக்கு பணத்தை பற்றித்தான் கவலை என்றும்  கடுமையாக விமர்சித்தார்.