நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

நாங்குனேரியில் காங்கிரஸ் போட்டியிடும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்.

அதுபோல புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறினார்.

மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தவர், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்க விருப்ப மனு நாளை மறுதினம் தொடங்கும் என்றும் அறிவித்தார்.

இதன் காரணமாக நாங்குநேரி தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்ற இழுபறிக்கு முடிவு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.