மார்ட்டின் ரூ.500கோடி நிதி கொடுத்ததாக செய்தி: விகடன் பத்திரிகைக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஸ்டாலின் நோட்டீஸ்

சென்னை:

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான  இடங்களில் கடந்த மாதம் 30ந்தேதி முதல் கடந்த 5ந்தேதி வரை தொடர் ரெய்டு நடைபெற்றது. வருமானவரித்துறையினர்  நடத்திய இந்திய ரெய்டில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதில், லாட்டரி அதிபர் மார்ட்டின், திமுக ஆதரவாளர் என்றும், திமுகவுக்கு ரூ.500 கோடி நிதி வழங்கியதாகவும் செய்தி வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், விகடன் பத்திரிகைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் இருந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் திமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டதற்காக ரூ.100 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், இது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்தில் தகுந்த விளக்கம் தெரிவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செய்தியாளர், உரிமையாளர் மீது சிவில்மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்பபடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMK President stalin, Martin news, Rs 100 crore, stalin, Vikatan magazine
-=-