சிறுபான்மை, பட்டியலின கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்: கே.என். நேரு பேச்சு

திருச்சி: சிறுபான்மை, பட்டியலின கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறி இருக்கிறார்.

திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, புதிதாக நியமனம் செய்யப்பட்ட திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும், ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், உள்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு பல கட்டங்களுக்கு பிறகு தான் இப்போது முதன்மைச் செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.

கட்சியினர் மத்தியில் சாதியை பார்க்காதீர்கள். கட்சி வளர்ச்சிக்கு தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். சிறுபான்மை, பட்டியலின கட்சித் தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பின்னர் கொள்ளலாம். சட்ட சபை தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றிபெற வேண்டும் என்றார்.

கட்சி தோழர்களோடு எப்போது அரவணைப்போடு இருந்தால் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

7 thoughts on “சிறுபான்மை, பட்டியலின கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்: கே.என். நேரு பேச்சு

  1. Pingback: buy viagra
  2. Pingback: buy cialis rush
  3. Pingback: buy 36 hour online

Comments are closed.