சென்னை:

மிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ராஜாஜி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்பட கூட்டணிக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்து ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து கைதான ஸ்டாலின் உள்பட எம்எல்ஏக்கள்  3 மணி அளவில் திடீரென விடுதலை செய்யப்பட்டனர்.

பொதுவாக மாலை 5 மணிக்குமேல்தான் இதுபோன்று கைது செய்யப்பட்டவர்கள்  விடுதலை செய்யப்படும் நிலையில், திமுகவினர் போராட்டம் காரணமாக 3 மணிக்கே கைது செய்யப்பட்ட வர்களை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.