வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம்:
த்திய பாஜ அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற உள்ளார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்கிறார்.

 

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அல்லா பக்ஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட அவைத்தலைவர் அசோகன், திமுக நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், மதுராந்தகம் குமார், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ஸ்ரீதரன், கே.எஸ்.ராமச்சந்திரன், கண்ணன், தம்பு, சத்தியசாய், சரவணன், ஏழுமலை, நிர்வாகிகள் எம்.எஸ்.சுகுமார், நீலகண்டன் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் யுவராஜ், தசரதன், கீழம்பி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.