ஜல்லிக்கட்டு அனுமதி கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை,

ல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி நாளை (3ந்தேதி) மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலின், மதுரை அருகே ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற இடமான அலங்காநல்லூரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் என்று அறிவித்திருந்தார்.

விலங்குகள் நல வாரியம் (பீட்டா) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. ஆனால்,  மத்திய , மாநில அரசுகள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக  நடைபெறும் என்று  கூறி வருகின்றனர்.

இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.

ஆகவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிமதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வருகிற நாளை காலை 10 மணியளவில் தி.மு.க.வின்  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

கழக உடன்பிறப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டு பங்குபெற வேண்டுமென்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.