சென்னை:

ரோட்டில் மறைந்த திமுக  தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்க அனுமதிர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சிலை வைக்க தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கு அரசிடம் இருந்து சரியான பதில் வராத நிலையில், அரசு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் முத்துச்சாமி (முன்னாள் அதிமுக அமைச்சர்) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்துள்ளார். தனது இறப்பு வரை சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் அவரது முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவ மாநகராட்சியிடமும், காவல் துறையிடமும் அனுமதி கேட்டோம். ஆனால், அவர்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை அருகே கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவ உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,. தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.