சென்னை: நீட் மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.  அதில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:  7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மக்கள் திமுக ஆட்சி வரும் என்று நம்புகின்றனர்.

திமுக ஆட்சிதானா என ஊடகங்கள் விவாதம் நடத்த வேண்டியது இல்லை. மக்கள் மனம் அது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா?. தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா?அதிலும் பொய்கள்.

கொரோனா குறித்து தமிழகம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்லி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 15 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நீக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் பேசினார்.