Random image

10ந்தேதி ‘பாரத் பந்த்’துக்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின்

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி நாடு முழுவதும்  ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தததுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு பெரும் பாலான எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், திமுகவும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி, 10-ந்தேதி, நாடுதழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு  திமுக ஆதரவு அளிக்கும். பந்த் வெற்றியடைய திமுக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறி உள்ளார்.