ஓ.பி.எஸ்ஸூக்கு ஆதரவா இல்லையா…! : : குழப்பும் சுப்பு

சென்னை:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்களா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க. தற்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவர் தலைமயில் இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது.

சசிகலாவுக்கு வழிவிட்டு தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறப்போவதாக ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். அதே நேரம், தனது தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதங்களை சசிகலா அளித்துள்ளார்.

ஆகவே தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை தீர்மானம் நாளை நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி நடந்தால், ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று காலை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து, “பன்னீர்செல்வத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று நான் சொல்லவே இல்லை” என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.