சென்னை:
மாகா தலைவர் ஜி கே வாசன் ,  திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜிகேவாசன் தெரிவித்ததாவது:
“நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் ரீதியாக மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.  தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.. தமிழக சட்டம் ஒழுங்கு குறித்தும்,  காவிரி, முல்லை பெரியாறு பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக அரசின் செயல்பாடு பற்றியும் விவாதித்தோம்.
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் அலட்சையமாக செயல்படுவது குறித்தும் விவாதித்தோம்.  ஓரிரு நாட்களில், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்திப்பேன்” என்றார்.

வாசன் - ஸ்டாலின் ( கோப்பு படம்)
வாசன் – ஸ்டாலின் ( கோப்பு படம்)

“உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு உண்டா” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமாகா தலைவர் என்ற முறையில் திமுக பொருளாளர் ஸ்டாலினை அரசியல் ரீதியாக சந்தித்திருக்கிறேன் என்றாலே அதன் பொருள் உங்களுக்கே புரியும்” என்று சிரித்தார்.
இதன் மூலம் தமாகா , திமுக கூட்டணி உறுதியாகி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  இதனால் ஏற்கெனவே தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தொடர்ந்து நீடிக்குமா வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.