ஆளுநரை மீண்டும் சந்திக்க திமுக முடிவு! ஆட்சி அமைக்க முயற்சியா?

--

சென்னை: 

மிழக அரசியலில் நிலவும்  பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்திக்க திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. வரும் 10ந்தேதி அல்லது 11ந்தேதி  நேரம் ஒதுக்க கோரி திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், ஏற்கனவே சசிகலா உறவினர் திவாகரன் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறிய நிலையிலும், 23 டிடிவி ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து  கடிதம் கொடுத்துள்ள நிலையில், கவர்னரை சந்தித்து, எடப்பாடி அரசு மீது பெரும்பான்மை நிரூபிக்க மனு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, டிடிவி சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன்  திமுக தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், இதுகுறித்து ஏற்கனவே திவாகரனுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக, எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக டிடிவி  தினகரன் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் 19 பேர் ஏற்கனவே ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடிக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கடிதம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்போது, கருணாஸ், கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் எடப்பாடிக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக 23 எமஎல்ஏக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்ற னர்.

ஏற்கனவே திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்துள்ள நிலையில், மீண்டும் வரும் 10ந்தேதி கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி கடிதம் கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் சசிகலாவின் உறவினர் திவாகரன்  திமுகவோடு இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் எடப்பாடி அரசுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர்.

டிடிவி அணி காங்கிரஸ்  மற்றும் திமுகவுடன் இணைந்து எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஸ்டாலின், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பது முக்கியத்து வம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.