சென்னை

திமுக சார்பில் இரு தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.    இதை ஒட்டி அனைத்து கட்சிகளும் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளன.    தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது தேர்தல் அறிக்கைகள் ஆகும்.

தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ள வேளையில் திமுக இந்த முறை இரு தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க வேண்டும் என கட்சியினரால் கட்சி தலைமைக்கு யோசனை அளிக்கப்பட்டுள்ளது.    அதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு அறிக்கையும் சட்டப்பேரவை இடைதேர்தலுக்கு ஒரு அறிக்கையும் திமுக தயாரிக்க உள்ளது.

சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக வெற்றியை பொறுத்து ஆட்சி மாற வாய்ப்புள்ளதால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னும் தலைப்பில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை அளிக்கப்பட உள்ளது.   இது குறித்து வந்துள்ள தகவல்களின்படி சட்டப்பேரவை இடைத் தேர்தல் அறிக்கையில் திமுக பல வாக்குறுதிகளை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த தேர்தல் அறிக்கையில் பேருந்து கட்டண குறைவு, மாதா மாதம் மின்கட்டணம், குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 6 மாதம் தினசரி ஒரு லிட்டர் இலவச பால் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.