துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! திமுகவினர் பதற்றம்

சென்னை:

திமுக பொருளாளர்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை  அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக திமுகவினர் பதற்றத்துடன் உள்ளனர்.

துரைமுருகன் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  பின்னர் கடந்தமாதம் சிறுநீரகத் தோற்று ஏற்பட்டு காய்ச்சல் காரணமாக இதே அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய திமுகவினர்,  திமுக பொருளாளர் துரைமுருகன் அதிக காய்ச்சல் காரண மாகவே இன்று  அதிகாலை சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்று அல்லது நாளை டவீடு திரும்புவார் என்று தெரிவித்துஉள்ளனர்.

திமுகவின் மூத்த தலைவர்களான அன்பழகன், துரைமுருகன் போன்றோர் அடிக்கடி அப்போலோவில் அனுமதிக்கப்படுவது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது