சென்னை:

திமுக பொருளார் துரைமுருகன் தனது மகன்  மற்றும் மனைவியுடன் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள்  தங்களது லாப நஷ்ட கணக்கினை எதிர்பார்த்து கூட்டணி அமைப்பது தொடர்பாக ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன. நேற்று தெலுங்கான முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில், இன்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திரா சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.

ஏற்கனவே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட நிலையில், அவரதுவீடு மற்றும் நிறுவனங்களில் இருந்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த  கோடிக்கணக்கான ரூபாய்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திராவுக்கு தனது மனைவி மற்றும் மகனுடன் சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன், அமராவதி தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்,  சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு என்றும், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.