Random image

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி…!

சென்னை:

திமுக பொருளாளர் துரை முருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று  சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

81 வயது ஆகும் துரைமுருகன் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் காய்ச்சல் காரணமாக துரைமுருகன் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.