Random image

எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசை வற்புறுத்தும் திமுக

சென்னை

பாஜக தலைவர் எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் விநாயகர் சிலை அமைப்பு காரணமாக பாஜக தலைவர் எச் ராஜா காவல்துறையினருடன் விவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.   இந்த வீடியோ பதிவில் அவர் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாகவும் உயர்நீதிமன்றத்தை ஒரு தகாத வார்த்தியாலும் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு பெருகி வருகிறது.   சமூக வலை தளங்களில் இந்த பதிவை பதிந்தவர்கள் பாஜக தலைவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.   பல எதிர்க்கட்சி தலைவர்கள் எச் ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி இது குறித்து டிவிட்டரில், “எச் ராஜா காவல்துறையினரிட தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்றத்தையும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்டு அவமதித்துள்ளர்.  இதற்கான காணொலி ஆதாரம் வெளியாகியுள்ளன.  கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் எச் ராஜா மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிந்துள்ளார்.