ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

சேலம்,

சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கோவையை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திமுகவினர் சாலைமறியல் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சேலம் , சங்ககிரி அருகே கொங்கனாபுரம் பிரிவு சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சேலத்திற்கு ஸ்டாலின் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சேலம் எஸ்.பி ராஜன் கூறி உள்ளார்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.