டில்லி:

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றுஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாடுடே- கார்வி இணைந்து தமிழகத்தில் 77 தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தியது.

தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என 40% பேரும், அவருக்கு 16 சதவீத ஓட்டு கிடைக்கும், 33 தொகுதிகளை பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி முதல்வராக வேண்டும் என 17 சதவீதம் பேரும், ரஜினி அரசியலில் தோல்வி அடைவார் என்று 34 சதவீதம் பேரும், வெற்றி பெறுவார் என்று 53 சதவீதம் பேரும், ரஜினி-கமல் இணைய வேண்டும் என 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி யாருடன் கூட்டணி வைக்க வேண் வேண்டாம் என 28 % பேரும், திமுகவுடன் சேரலாம் என 21% பேரும், பா.ஜ.க.வுடன் சேரலாம் என 20% பேரும், அதிமுகவுடன் சேரலாம் என 11% பேரும், காங்கிரசுடன் சேரலாம் என 2 % பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க 26 சதவீத ஓட்டுகளுடன் 68 தொகுதிகள் வரை பிடிக்கும் தி.மு.க. கூட்டணி 34 சதவீத ஓட்டுக்களுடன் 130-க்கும் மேலான தொகுதிகளை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் முதல்வராக 50% பேரும், ரஜினி முதல்வராக 17% பேரும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக 11% பேரும், பழனிச்சாமி முதல்வராக, 5% பேரும்,கமல் முதல்வராக 4%பேரும், டிடிவி தினகரன் முதல்வராக 3% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.