சென்னை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது: டிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:

சென்னையில் நாளை மாலை நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது என திமுக எம்.பி.  டி.கே.எஸ். இளங்கோவன்  கூறி உள்ளார்.

தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை  (செப்டம்பர் 30) மாலை தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு பொன்விழா கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக எம்.பி.கனிமொழி, டிடிவி தினகரன் உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தான் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுகவும்  பங்கேற்காது என்று திமுக செய்தித் தொடர்பாளர்  டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறித்து,  முறையாக தெரிவிக்காமல் அவர்களாகவே அழைப்பிதழில் பெயரை அச்சிட்டுள்ளனர்..
ஏற்கனவே ஒரு முறை அழைப்பு தந்து 4வது வரிசையில் அமர இடம் ஒதுக்கீடு செய்தது இதே அரசு.. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.
எனவே, சென்னையில் நாளை  நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது,

இவ்வறு  டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMK will not participate in Chennai MGR Century Completion function: dmk mp TKS Elangovan announced, சென்னை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது: டிகேஎஸ் இளங்கோவன்
-=-