மொழி திணிப்பை எப்போதும் திமுக எதிர்க்கும்: எம்.பி கனிமொழி

எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, “எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் தி.மு.க எதிர்க்கும். பாராளுமன்றத்திலும் தி.மு.க எதிர்க்கும்.

மக்களவையில் எத்தனை பேர் இருந்தாலும், ஒரு எம்.பியாக இருந்தாலும், தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தோம். அதேபோல் தற்போது தமிழ்நாட்டுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.