சென்னை:

ர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற  தமிழக முதல்வரின் குறைதீர்வு விழாவில், அந்த தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குறைகளை சுட்டிகாட்டி பேசிய போது அமைச்சர் வீரமணிக்கும்,  திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதுபோல நேற்று கோவை, சிங்காநல்லூர்  தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்தனர்.. அவர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவங்கள் திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கே இந்த கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.