ஆர்.கே.நகரில் திமுக வெற்றிபெறும்! வைகோ

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு திமுக செயல்தலைவர் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலை மதிமுக தலைமை அலுவலகம் சென்று வைகோ சந்திது நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று வைகோ கூறினார்.

மேலும், ”ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக திமுகவுக்கு ஆதரவளிக்கிறது. திராவிட இயக்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வியக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கும் உள்ளது. அதன் காரணமாகவே  திமுகவுக்கு ஆதரவளிக்கிறோம் என்றார். இந்த தேர்தலில் . திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. திமுகவைத் தோற்கடிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என்ற வைகோ, மதிமுகவின் திமுக ஆதரவு அறிவிப்புக்கு  கட்சி நிர்வாகிகள், நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்” என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறும்போதுழ, ”திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு அளித்த மதிமுக தலைவர் வைகோவுக்கு நன்றி” எனக் கூறினார்.

திமுகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மதிமுகவும் ஆதரவு அளித்துள்ளது.