கனிமொழி தலைமையில் நாளை திமுக மகளிரணி கூட்டம்!

சென்னை:

 திமுக மகளிரணி கூட்டம்  திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக சார்பில், மகளிர்அணி, தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நாளை (7/12/19) காலை 9 மணிக்கு சவேரே ஓட்டலில் நடைபெற உள்ளது என்றும்,  மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.