ஜனவரி 21ந்தேதி திமுக செயற்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு

சென்னை:

ரும் 21ந்தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 21-01-2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி அளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில்  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.