மோடி அரசின் நான்காண்டு பொய்கள்: அனைத்து கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

--

சென்னை:

பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியின் பொய் ஆதாரங்கள் குறித்து பதிவிட்டு, அனைத்து கட்சி உறுப்பினர்களும், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

 மோடி அரசின் நான்கு ஆண்டுகள் பொய் ஆதாரங்கள்!

வாக்குறுதிகள்:

கருப்பு பணத்தை மீட்பு, 10 கோடி பேருக்கு வேலைகள், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், பொருளாதார வளர்ச்சி, லோக் பால் சட்டம் அமல்படுத்தப்படும்.

வழங்கப்பட்டது:

எரிபொருள் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு, வகுப்புவாத அரசியல்,  கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான போக்கு

மேற்கண்டதை  கோடிட்டு காட்டி அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் டுவிட் செய்துள்ளார்.