திமுக புதிய இளைஞர் அணி தலைவராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமனம்!

சென்னை,

திமுகவின் புதிய இளைஞர் அணி தலைவராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ந்தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று அவர் தனது இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய இளைஞர் அணி தலைவராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தி.மு.க.  செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதால், அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி: 18, 19 பிரிவுகளின்படி,
இளைஞர் அணிச் செயலாளர்        –    திரு. மு.பெ. சாமிநாதன், பி.ஏ.,

இளைஞர் அணி இணைச் செயலாளர் –   திரு.சுபா.சந்திரசேகர்,  எம்.ஏ.,

ஆகியோர் தலைமைக் கழகத்தால்  நியமிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்து உள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக வெள்ளக்கோவில் சாமிநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.