தி.மு.க.வின் “பி” டீம்தான் ம.ந.கூட்டணி?!:  இப்படி ஒரு பார்வை

download

மக்கள் நலக்கூட்டணியை, அ.தி.மு.க.வின் பி டீம் என்று பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால், அக் கூட்டணி, திமுகவின் பி டீம்தான் என்பதாக ஒரு பதிவு வாட்ஸ்அப்களில் உலாவருகிறது.

வித்தியாசமான பார்வைகொண்ட அந்த பதிவு:

“மக்கள் நலக்கூட்டணி யால் திமுகவிற்கே நல்லது நடந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். மதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும் திமுக பக்கம் வந்திருந்தால் நிச்சயமாக அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சி அமைத்திருக்கும்தான்.

ஆனால், அப்படி இல்லாமல்… 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்  போல இந்த கட்சிகள் அணைத்தும் அதிமுக அணியில் நின்று…  விசிக மட்டும் திமுக அணியில் இருந்திருந்தால் (பாமக தனித்து நின்றிருக்கும் சூழலில் ) திமுக பெரும் இழப்பை சந்தித்திருக்கும்.  அது கட்சியை மீள முடியா படுகுழுயில் தள்ளியிருக்கும்.

இப்பொழுதும் திமுக ஆட்சியில் இல்லையே தவிர 2011,2014 ஒப்பிடுகையில் அதிக வாக்கு, சீட்டுகளுடன் மீண்டு வந்துள்ளது. மிகப்பெரிய எதிர்க்கட்சி வாய்ப்பு.

திமுகவிற்கு இத்தகைய சந்தர்ப்பத்தை கொடுத்த  ம.ந.கூ திமுகவின்  பி டீம் தான்!