நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக தார்மீக ஆதரவு: ஸ்டாலின் டுவிட்

--

டில்லி:

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள நம்பிக்கை யில்லா தீர்மானம் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவளிக்கும் என்றும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும் என்று கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பாரதியஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாராளுமன்ற செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதை ஏற்று நாளை (20ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.