திமுகவினரின் ரெயில்மறியல் போராட்டம் தொடங்கியது….

--

சென்னை,

மிழகம் முழுவதும் திமுகவினரின் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கி உள்ளது.  பல ஊர்களில் காலையிலேயே போராட்டம் ஆரம்பமானது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்காததைக் கண்டித்தும்,

தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்து கின்றனர். பல ஊர்களில் காலையிலேயே ரெயிலை மறிக்கத் தொடங்கி விட்டனர்.

 

இன்று முற்பகல் 11 மணி அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஊர்களில் காலையிலேயே ரெயில் மறியல் தொடங்கி விட்டது.

திமுகவினர்  அலைஅலையாக வந்து ரெயில்களை மறித்துப் போராட்டம் நடத்தியதால் ரெயில் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.

இதன் காரணமாக பெரும்பாலான மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமி தலைமையில் அவரது மகன் செந்தில் குமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

திருத்தணி அருகே திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், அரக்கோணம் பாசஞ்சர் உள்பட 5 ரயில்கள மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.