சென்னை: திமுகவின்  திருச்சி மாநாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதிமுக ரூ.1500 வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்து விட்டது என்று குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், திமுகவின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்  சாத்தியமில்லை என்று  தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால், அதிமுகவோ,     ரூ.1500 வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் எல்.முருகன் பதில் கூறுவதாக என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி திருச்சியின் சிறுகனூரில் திமுக சார்பில் மார்ச் 7ந்தேதி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில்இ பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகியவை முக்கியமானவை என்று தெரிவித்துடன்,  மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிடுகிறேன். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் அதிரடியாக கூறினார்.

இது  ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மற்றொருபுறம் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன், திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார். இந்த பஞ்சாயத்து ஒருபுறம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது,

இந்த நிலையில், மகளிர் தினத்தையொட்டி  செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும்  அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டனர்.

 அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ 1500 வழங்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற இரு திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டனர். அதிமுகவின் அதிரடி அறிவிப்பும் வரவேற்பும், விமர்சனங்களையும் எழுப்பி உள்ளது.

திமுகவின் ரூ.1000 திட்டம்  சாத்தியமில்லை என்று கூறிய பாஜக தலைவர் முருகன், அதிமுகவின் ரூ.1500 திட்டம் குறித்து விமர்சிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.  இது அரசியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகிறது.  ரூ.1000 இலவசமாக தர முடியாது என்றால், ரூ.1500 எப்படி கொடுக்க முடியும், அது மட்டும் சாத்தியமாகுமா  என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழர்களையும், தமிழக மக்களையும் இலவசம் என்ற ஆசைகாட்டி அடிமையாக்கி வருகின்றன இரு கட்சிகளும் என்று இளைய தலைமுறையினர் கொந்தளித்துள்ளனர்.

குடும்பதலைவிக்கு ரூபாய் 1000, 1500 இலவசம். சிலிண்டர் இலவசம் என சொல்லும் திமுக, அதிமுக தரமான கல்வியும், மருத்துவமும் இலவசம் என்று சொல்லுங்கள்

@mkstalin @CMOTamilNadu @AIADMKOfficial

அதிமுக : 1. 6 சிலிண்டர்கள் இலவசம் 2. குடும்பத் தலைவிக்கு மாதம் ₹1500 திமுக : 1.குடும்பத் தலைவிக்கு மாதம் ₹1000 இதற்க்கெல்லாம் வருமானம் ??? விலைவாசி உயர்வு தான் !!!

ஏற்கனவே கடன் . இதனால் பல பாதிப்பு வரும். பல இளைஞர்கள் இந்தியாவை விட்டே செல்கிறார்கள்.திமுக அதிமுக நாட்டுக்கே கேடு. இலவசம் வேண்டாம்.வேலை வாய்ப்பு தான் முக்கியம்.
மகளிர் தினத்தன்று திமுக & அதிமுக கட்சிகளால் மீண்டும் ஒரு இலவசம் அறிவிப்பு. மாதம் 1000 / 1500 உதவித்தொகையாம்! மதுவிலக்கை அமல்படுத்தினாலே ஒரு குடும்பத்திற்கு தோராயமாய் மாதம் ரூ.5000 தருவதற்கு சமம்! மேலும் ஏராளமான குற்றங்களையும் விபத்துகளையும் தவிர்க்க முடியும்!
திமுக எட்டு அடி பாய்ந்தால் அதிமுக 16 அடி பாய்கிறது. திமுக 1000 என்றால் அதிமுக 1500 + 6 சிலிண்டர் இலவசம். அதிமுக முந்துகிறது.
மாதம்தோறும் ரூ 1500; வருடத்துக்கு 6 சிலிண்டர் இலவசம் என்ற அறிவிப்பு ஸ்டாலினின் கனவுகளை தவிடுபொடியாக்கிவிட்டது. அதிமுக பா.ஜ .க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது. திமுக கூட்டணி 2 வது இடத்தைப் பிடிக்குமா… கமலஹாசன் அணிக்கும் கீழே போகுமா என்பதுதான் இப்போதைய நிலவரம்
இதுபோன்று ஏராளமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் உலாக வருகின்றன.