மதுரை:

கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மதுரை காமராஜர் துணைவேந்தர் தலைமையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ள்ளது. கொந்தகையில் நடந்து வரும் ஆய்வின்போது முதுமக்கள் தாழியின் மூடி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் பல்வேறு வடிவங்களில் அதிகளவில் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளின் அருகே அதன் மூடிகள் கிடைத்துள்ளன.

கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்துவரும்  அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. இது இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக கொந்தகை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தற்போது கொந்தகை அகழாய்வில் கிடைத்த தாழி மூடியில், பிடிமானப்பகுதி கருப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்திலும் என இரு வண்ணங்களில் உள்ளது. கூம்பு வடிவிலும் உள்ளது. தாழிகள் குறைந்த ஆழத்திலேயே கிடைத்துள்ளதால் இதற்கு கீழே மேலும் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது அவை இன்னும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை” என மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.

இந்த முதுமக்கள் தாழி குறித்து, மதுரை காமராஜர் துணைவேந்தர் தலைமையில் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது நடந்துவரும் ஆறாம்கட்ட ஆய்வில் கிடைக்கும் பொருட்களை ஆய்வு செய்ய, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , ஹார்வர்டு பல்கலைக்கழகம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.