காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை! துபாயில் ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று சர்வதேச செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த்,  காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை என்று கூறினார்.

இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குழுவினர்  இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் சந்திப்பு நடக்கும் ஹோட்டலுக்கு வந்திறங்கினர். ரஜினிகாந்த், எமி ஜாஜ்கசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நிர்வாகி ராஜு மகாலிங்கம் ஒரு ஹெலிகாப்டரிலும், ஷங்கர், ஏஆர் ரஹ்மான், அக்ஷய் குமார் ஆகியோர் இன்னொரு ஹெலிகாப்டரிலும் வந்து இறங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே ரஜினி பதில் கூறினார். மற்ற கேள்விகளுக்கு இயக்குனர் ஷங்கர்  அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் பதிலளித்தனர்.  அதுபோல ஏ.ஆர். ரஹ்மானும் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளித்தார்.

ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினியிடம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். பொதுவாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே? என்றார்.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ரஜினி, ‘நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தருவதில்லை. அதனால் எளிமையாக இருக்கிறேன்,’ என்றார் தனக்கே உரிய சிரிப்புடன். இந்த பதிலுக்கு அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

மேலும் படம் குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர், 2.0 படமான எந்திரனின் தொடர்ச்சி அல்ல என்று கூறினார். ஏ.ஆ.ரகுமான் கூறும்போது எந்திரனில் 3 பாடங்கள் இருந்தாக கூறினாபர்.

இதையடுத்து நாளை 2.0 படத்தின் இசை வெளியீடு பியுரிஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இதற்கு துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க   அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும். துபாய் மன்னர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல நடிகர் கமலஹாசனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.